உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புரோக்கர்களே இல்ல! இப்போ அதுக்கும் மேல | Govt Nurse | MRB | MRB Tamilnadu

புரோக்கர்களே இல்ல! இப்போ அதுக்கும் மேல | Govt Nurse | MRB | MRB Tamilnadu

அரசு மருத்துவமனைகளில் உருவாகும் காலி பணியிடங்களை பொது கவுன்சிலிங் மூலம் மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை நிரப்பி வருகிறது. 2024ம் ஆண்டுக்கான பொது கவுன்சிலிங் வரும், 11, 12ம் தேதிகளில் அந்தந்த சுகாதார மாவட்டங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடக்க உள்ளது. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை. காலி பணியிடங்கள் முன்கூட்டியே விற்பனை செய்யப்பட்டது. கண்துடைப்புக்காக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது என நர்ஸ்கள் குற்றம் சாட்டி உள்ளனர். நர்ஸ் பணியிட மாறுதல்களை மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குனரகம் மேற்கொள்கிறது. முந்தைய ஆட்சியில் புரோக்கர்கள் மூல, பணியிட மாறுதலுக்கு பணம் பெறப்பட்டது. இப்போது அதிகாரிகளே நேரடியாக பணம் கேட்கும் நிலை உள்ளது. மருத்துவ தேர்வு வாரியமான எம்.ஆர்.பி மூலம் புதிதாக பணிக்கு சேர்ந்தவர்கள் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல பணம் கொடுத்துள்ளனர். 6 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை முன்கூட்டியே கொடுத்து இடங்களை பெற்று விட்டனர். தற்போது கணக்கு காட்டுவதற்கு பணியிட மாறுதல் கவுன்சிலிங் அறிவித்துள்ளனர். எவ்வளவு இடங்கள், எந்தந்த பகுதிகளில் காலியாக உள்ளன போன்ற தகவல்களை தெரிவிக்கவில்லை. தென்மாவட்டங்களில் உள்ள இடங்கள் பெரும்பாலும் கவுன்சிலிங்கிற்கு முன் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பணம் இருப்பவர்கள் மட்டுமே சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. பணவசதி இல்லாதவர்கள் பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் ஒரே இடத்தில் பணிபுரிகிறோம் என்கின்றனர் சீனியர் நர்ஸ்கள். அரசு டாக்டர்கள் பணியிட மாறுதலில் இருக்கும் வெளிப்படைத்தன்மை நர்ஸ்களுக்கு இல்லை. சீனியாரிட்டி அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கும் வகையில் மாநில அளவில் ஒரே இடத்தில் கவுன்சிலிங் நடத்த வேண்டும். எவ்வளவு இடங்கள், எந்தெந்த பகுதிகளில் காலியாக உள்ளது என்பதை முன்கூட்டிய தெளிவாக தெரிவிக்க வேண்டும் என நர்ஸ்கள் கூறினர். இந்த குற்றச்சாட்டுக்கு மருத்துவ ஊரக நல பணிகள் துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நர்ஸ் பணியிடங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறுவது தவறு. காலிப்பணியிட விபரம், பொது கவுன்சிலிங்கில் வெளியிடப்படும். வெளிப்படை தன்மையுடன் தான் பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது என கூறியுள்ளனர்.

நவ 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !