/ தினமலர் டிவி
/ பொது
/ அரசு பள்ளி தமிழ் மன்றங்களை மேம்படுத்தி பலன் இல்லை|PMK AnbumaniRamadoss|Tamil education compulsory
அரசு பள்ளி தமிழ் மன்றங்களை மேம்படுத்தி பலன் இல்லை|PMK AnbumaniRamadoss|Tamil education compulsory
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்தவும், ஆண்டுக்கு 3 முறை தமிழ் கூடல் நிகழ்ச்சிகளை நடத்தவும் 5.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழ்மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையிலும், தமிழுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களை பற்றி தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஜன 02, 2024