தலைமை ஆசிரியருக்கு கால் பிடித்து விட்ட குழந்தைகள்! | Govt School | Arur School Viral Video | HM | Dh
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 30க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். தலைமை ஆசிரியை கலைவாணி வகுப்பறை பெஞ்சில் படுத்து தூங்குவதாகவும், மாணவர்களை கை கால் பிடித்து விட சொல்வதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோவும் வைரலாகி பரபரப்பை கிளப்பியது. இதை அறிந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பள்ளியை முற்றுகையிட்டனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயகுமார் உட்பட அதிகாரிகள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். முடிவில் கலைவாணி வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் இடமாற்றம் என்பது வெறும் கண் துடைப்பு என ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.