3 பேர் எரிக்கப்பட்ட வழக்கில் விசாரணை தீவிரம் woman, son, grandson dies charred Cuddalore police
கடலூர் காராமணிகுப்பத்தை சேர்ந்தவர் சுதன்குமார் (40). சாப்ட்வேர் இன்ஜினியர். ஐதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஐ தராபாத்தில் 15 நாளும், கடலூர் வீட்டில் 15 நாளும் பணிபுரிந்து வந்தார். கடலூர் வீட்டில் மகன் நிஷாந்த் வயது 10, தாய் கமலேஸ்வரி 60 ஆகியோருடன் வசித்தார். கடந்த 15ம்தேதி சுதன்குமார், நிஷாந்த், கமலேஸ்வரி மூவரும் வீட்டில் எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். 3 பேர் உடல்களும் வெவ்வேறு அறைகளில் கிடந்தது. மூவரும் கடந்த வெள்ளிக்கிழமையே வெட்டி கொல்லப்பட்டுள்ளனர். 3 நாள் கழித்து மீண்டும் வந்த கொலையாளிகள் மூவரின் உடல்களை தீ வைத்து எரித்துள்ளனர் என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர். சுதன்குமார் மற்றும் அவரது தாயாரின் செல்போனுக்கு போன் செய்தவர்களின் விவரங்களை சேகரித்து அதனடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.