இந்தியாவின் 100வது ராக்கெட்டில் இவ்வளோ இருக்கா? | GSLV-F15 | NVS_2 | ISRO
விண்வெளி துறையில் உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் பல சாதனைகளை இந்தியா படைத்துள்ளது. இப்போது இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி-எப்15 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து என்விஎஸ்-2 செயற்கைக்கோளை சுமந்து சென்றது. இந்த செயற்கைக்கோளை வடிவமைப்பதற்கு இந்திய தொழில்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. ஜிபிஎஸ் சேவை அளிப்பதற்கான இந்த NVS -2 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களை தெரிவிக்கும். குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் எனப்படும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு அவர்களால் இயக்கப்படுகிறது. நாவிக்(NavIC) எனப்படும் இந்தியாவுக்கான தொழில்நுட்பம் இஸ்ரோவால் உருவாக்கப்பட்டுள்ளது.