மூதாட்டிக்கு வந்த கடிதத்தால் ஆம்பூரில் பரபரப்பு | GST | Fake GST
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராணி, வயது 60. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவரும் திருமணமான பிறகு தனிகுடித்தனம் சென்றுவிட்டனர். ராணி மட்டும் தனியாக வசித்து வருகிறார். அங்குள்ள தோல் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக வேலை செய்கிறார். இவரது மாத வருமானம் 10 ஆயிரத்தை கூட தாண்டாது. அப்படி இருக்கையில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி பாக்கி கட்ட வேண்டும் என ராணிக்கு லெட்டர் வந்துள்ளது. கடித்தில் என்ன இருக்கிறது என்பதை படிக்க தெரியாமல் அக்கம் பக்கத்தினரிடம் காட்டி விவரம் கேட்டுள்ளார் ராணி.
அக் 21, 2024