உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பல் பொடி முதல் கார் வரை: எதெல்லாம் விலை குறையுது? - முழு பட்டியல் | GST | New GST Slap | GST bonanz

பல் பொடி முதல் கார் வரை: எதெல்லாம் விலை குறையுது? - முழு பட்டியல் | GST | New GST Slap | GST bonanz

இந்தியாவில் 2017ல் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது முதல் 5,12,18,28 சதவிகிதம் என நான்கு பிரிவுகளாக வகைபடுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சிறு, குறு நிறுவனங்களுக்கு பலன் அளிக்கும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். அதற்கான குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி குறைப்பால் ஏழைகள், பெண்கள், விவசாயிகளின் நிதி நிலைமை மேம்படும் என கூறியிருந்தார். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து ஜிஎஸ்டி வரி விதிப்பில் நடக்கும் முக்கிய மாற்றம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இனி 12, 28 சதவிகித வரி விதிப்பு முறை நீக்கப்பட உள்ளது. 12 சதவீதத்தில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி விதிப்பு முறைக்கு மாற்றப்படும். உணவுப்பொருட்கள், மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் 5 சதவிகித வரி விதிப்பு முறையில் இருக்கும். இதேபோல் 28 சதவீத அடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவிகித முறைக்கு மாற்றப்படும். இதனால் ஜவுளி, உரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகனம், கைவினைப்பொருட்கள், விவசாயம், சுகாதாரம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட 8 துறைகள் இதன் மூலம் பயனடைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், ஆடம்பர பொருட்கள், ஆன்லைன் கேமிங், புகையிலை, குட்கா, சிகரெட் ஆகியவற்றுக்கு 40 சதவிகிதம் என சிறப்பு வரி விதிக்கப்படும் என தெரிகிறது. இதில் 5 முதல் 7 பொருட்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை