/ தினமலர் டிவி
/ பொது
/ ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் ஜிஎஸ்டி வருமானம்: இறக்குமதியால் பெருகும் வருமானம் | GST | October GST
ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் ஜிஎஸ்டி வருமானம்: இறக்குமதியால் பெருகும் வருமானம் | GST | October GST
ஜிஎஸ்டி வசூல் 23 சதவீதம் அதிகரிப்பு! அக்டோபரில் மட்டும் இத்தனை லட்சம் கோடியா? நாட்டின் பல்வேறு பொருட்களுக்கும், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படுகிறது. அதன் படி, நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் இதுவரை 14.78 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில், 13.2 சதவீதம் அதிகம். அக்டோபர் மாதத்தில் மட்டும் 2.31 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 23 சதவீதம் அதிகம் என மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டள்ளது.
நவ 01, 2026