ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார் விலையை குறைத்த நிறுவனங்கள்! GST Reform | Car Price Decrease | Auto Marke
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, சமீபத்தில் ஜி.எஸ்.டி.யில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டடுக்கு வரி விகிதங்கள் அமலுக்கு வரவுள்ளது. அந்த வகையில், சிறிய கார்களுக்கான ஜி.எஸ்.டி, 28 சதவீதத்தில் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், பெரிய சொகுசு கார்களுக்கான வரி, 28ல் இருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. புதிய வரி நடைமுறை, வரும் 22 முதல் அமலாக உள்ள நிலையில், பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள், தற்போதே கார்களின் விலையை குறைத்துள்ளன. அதன்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்கள் கார்களுக்கான விலையை, 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது. மஹிந்திரா நிறுவனம், கார்களுக்கான விலையை, 1 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் வரை குறைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ரெனால்ட் இந்தியா நிறுவனம், கார்களுக்கான விலையை, 95 ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது. இந்த வரிசையில் மாருதி சுசூகி நிறுவனமும், கார்களுக்கான விலையை, 6 முதல் 9 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது. #GSTReform #TaxReform #EconomicGrowth #GovernmentPolicy #BusinessNews #Finance #Taxation #SmallBusiness #PolicyChange #FiscalPolicy #Compliance #Economy #HST #ValueAddedTax #FinancialEducation #CarPrice #CarShopping #AutoMarket #VehicleValue #NewCar #UsedCar #CarDeals #CarBudget #AffordableCars