உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உள்நாட்டு வருவாய், இறக்குமதி வருவாய் மூலம் உயர்ந்த ஜிஎஸ்டி வசூல் | GST revenue | Febraury | Gross GS

உள்நாட்டு வருவாய், இறக்குமதி வருவாய் மூலம் உயர்ந்த ஜிஎஸ்டி வசூல் | GST revenue | Febraury | Gross GS

பிப்ரவரியில் கிடைத்தது ₹1.84 லட்சம் கோடி GST 2024ஐ விட 9.1% அதிகம் ஒவ்வொரு மாதமும் வசூலாகும் ஜிஎஸ்டி தொகை குறித்த விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் வெளியிடுகிறது. உள்நாட்டு வருமானம், இறக்குமதி மூலம் கிடைத்த வருமானம் அதிகரித்ததால், பிப்ரவரி ஜி.எஸ்.டி வசூல் 10 சதவீதம் அதிகரித்து உள்ளதாக கூறியுள்ளது. பிப்ரவரியில் மொத்தம் 1 லட்சத்து 83 ஆயிரத்து 646 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.35,204 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.43,704 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 90,870 கோடி, செஸ் வரி ரூ.13,868 கோடி. 2024 பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு ஜிஎஸ்டி வசூல் 9.1 சதவீதம் அதிகம். ஜனவரியில் ஜி.எஸ்.டி வசூல் 1.96 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜிஎஸ்டி வருவாயில் 11 சதவீத அதிகரிப்பு இருக்கும் என்று அரசு கணித்துள்ளது.

மார் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை