உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கந்துவட்டி கொடுமையால் நடந்த விபரீதம் | Gudiyatham | Usury | lending money

கந்துவட்டி கொடுமையால் நடந்த விபரீதம் | Gudiyatham | Usury | lending money

வேலூர், குடியாத்தம் அடுத்த சரகுப்பத்தை சேர்ந்தவர் நஸ்ருல்லா, வயது 36. தச்சு வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஆசிபா. தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்ப செலவுக்காக சாமிநாதன் மற்றும் அஜிம் ஆகியோரிடம் கடன் வாங்கினார் நஸ்ருல்லா. வார வாரம் வட்டியும் கட்டி வந்துள்ளார். ஆனால் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து வட்டி கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறினர். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து கிளம்பிய நஸ்ருல்லா திரும்ப வரவில்லை. பதறிப்போன குடும்பத்தினர் ஊர் முழுக்க தேடினர். செட்டிகுப்பம் ஏரி அருகே வேப்ப மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக அங்கு மாடு மேய்க்க சென்றவர்கள் கூறினர். அது காணாமல் போன நஸ்ருல்லா தான் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். இது குறித்து குடியாத்தம் போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டது. அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். இறப்பதற்கு முன் நஸ்ருல்லா பேசிய வீடியோ அவரது செல்போனில் இருந்தது. எனது சாவுக்கு காரணம் இரண்டு பேர் தான். அவர்களுக்கு வட்டி கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகிறேன் என கண்ணீருடன் பேசி உள்ளார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூலை 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ