செஸ் சாம்பியனுக்கு நினைவு பரிசு தந்து வாழ்த்திய மோடி
மிக இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷை, பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார். டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த குகேஷ், உலக சாம்பியன் பட்டம் வென்றதற்கான கோப்பை மற்றும் பதக்கத்தை மோடியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். குகேஷுக்கு பிரதமர் மோடி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். இளம் வயதில் மிகப் பெரிய சாதனை படைத்த குகேஷ், நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் பிரதமர் மோடி பாராட்டினார். சில ஆண்டுகளாக குகேஷிடம் நெருக்கமாக பழகி வருகிறேன் அவருடைய உறுதியும், அர்ப்பணிப்பும்தான் என்னை மிகவும் கவர்ந்தது.
டிச 28, 2024