கிண்டி டாக்டருக்கு நடந்த கொடூரம்-முழு பின்னணி guindy doctor case | chennai doctor attack Dr Balaji
உலுக்கும் கிண்டி டாக்டர் சம்பவம் கொஞ்சம் கூட பதறாத கொடூரன்! ஸ்பாட்டில் என்ன நடந்தது? சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மூத்த டாக்டர் ஒருவரை நோயாளியின் மகன் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தையே உலுக்கிப்போட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான விக்னேஷ் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் நடந்த விதம், பின்னணி பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி போலீசார் கூறியது: கிண்டி அரசு மருத்துவமனையில் செயல்படும் புற்றுநோய் பிரிவின் சிறப்பு நிபுணராக இருப்பவர் டாக்டர் பாலாஜி ஜெகநாதன். புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் பல நோயாளிகளுக்கு இவர் சிகிச்சை அளித்து வருகிறார். இவரிடம் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் ஒருவர் காஞ்சனா. சென்னை பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காஞ்சனா, பின்னர் கிண்டி அரசு மருத்துவமனைக்கு வந்தார். மே மாதம் முதல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காஞ்சனாவை அவரது மகன் விக்னேஷ் மருத்துவமனைக்கு அழைத்து வருவது வழக்கம். இன்றும் தனது தாயாரை அழைத்துக்கொண்டு விக்னேஷ் வந்தான். புறநோயாளிகள் பிரிவில் அனுமதி சீட்டு வாங்கி கொண்டு இருந்தான். அப்போது தான் அந்த வழியாக டாக்டர் பாலாஜி ஜெகநாதன் போவதை கண்டான். அவரிடம் தனது தாய்க்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டான்.