உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடித்து ஊற்றும் மழை... உச்சக்கட்ட வானிலை அலர்ட் | gujarat floods | gujarat cyclone IMD | TN weather

அடித்து ஊற்றும் மழை... உச்சக்கட்ட வானிலை அலர்ட் | gujarat floods | gujarat cyclone IMD | TN weather

ஒரே நேரம் 2 புயல் சின்னம் 2 பக்கம் அதிரும் இந்தியா! மிரட்டும் வானிலை இந்தியாவில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னம் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை மையம் அதிர வைத்துள்ளது. இது பற்றிய வானிலை மைய அறிவிப்பு: மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது அப்படியே மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும். நாளை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். பின்னர் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும். ஒடிசாவில் அடுத்த 3 நாட்கள் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஆந்திர மாநிலத்துக்கும் நல்ல மழை கிடைக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்னொரு பக்கம் குஜராத்தின் சவுராஷ்டிரா, கச்சத் இடையே ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் நிலவுகிறது. இது படிப்படியா தென்மேற்கு திசையில் நோக்கி நகர்கிறது. கடல் பகுதிக்கு வந்த பிறகு நாளை புயலாக வலுவடையும். அடுத்த 2 நாளில் இந்திய கடல் பகுதியை விட்டு விலகி அரபிக்கடலில் மேற்கு நோக்கி நகர்ந்து விடும். ஏற்கனவே குஜராத்தில் கன மழை வெளுத்த வாங்கும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதே போல் கேரளா, கர்நாடகாவுக்கும் பரவலாக மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரியை பொறுத்தவரை புயல் மற்றும் புயல் சின்னத்தின் பாதிப்பு இருக்காது. இருப்பினும் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை