உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக் ஸ்பையாக செயல்பட்ட குஜராத் அரசு ஊழியர் சிக்கினார் Gujarat health worker arrested Spying For Pak

பாக் ஸ்பையாக செயல்பட்ட குஜராத் அரசு ஊழியர் சிக்கினார் Gujarat health worker arrested Spying For Pak

பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்ட இந்தியர்கள் மீது பாதுகாப்பு அமைப்புகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனிடையே, பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு வேலை பார்த்த பலரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், அரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ேஹாத்ராவை அம் மாநில போலீசார் கைது செய்தனர். டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உளவுத்துறை அதிகாரியாக இருந்த இஹ்சான் உர் ரஹிம் என்ற டேனிஷுடன் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்ட பிறகே அவர் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்தது விசாரணையில் தெரிய வந்தது. பாகிஸ்தான் தூதரகத்தில் விசாவுக்காக விண்ணப்பித்த ஜோதி உள்ளிட்ட மேலும் சிலரையும் டேனிஷ், பாகிஸ்தானுக்காக உளவு வேலை பார்க்க வைத்ததும் தெரிய வந்தது. அந்த வகையில் பஞ்சாபைச் சேர்ந்த 31 வயது பெண் குசாலா மற்றும் அவரது உதவியாளர் யாமின் முகமது ஆகியோரும் ஸ்பை வேலை பார்த்ததற்காக கைது செய்யப்பட்டனர். இவர்களும் டேனிஷுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை கொடுத்ததற்காக ஜோதி, குசாலா, யாமின் உள்ளிட்டோருக்கு பாகிஸ்தானிய உளவு அதிகாரி டேனிஷ் பணம் கொடுத்துள்ளார். பாகிஸ்தானில் தங்கியிருந்தபோது பல சலுகைகள் வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். டில்லியில் இருந்தபடி, பாகிஸ்தானுக்காக டேனிஷ் வேவு பார்த்தது தெரிய வந்ததும் அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றியது மத்திய அரசு. பஞ்சாபைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தேவேந்தர் சிங், சுக்பீர் சிங், கரண்பிர் சிங், முகமது முர்தாஜா அலி MOHAMMAD MURTAZA ALI அரியானாவைச் சேர்ந்த அர்மான், tareef டரீஃப், நவ்மன் இலாஹி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ேஷசாத் SHEHZAD துஃபைல் Tufail ஆகியோரையும் அந்தந்த மாநில பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஸ்பை வேலை பார்த்ததாக கைது செய்யப்பட்ட அனைவருமே பாகிஸ்தானில் இருக்கும் உளவுத் துறை ஏஜென்ட்களுடன் போனில் தொடர்பில் இருந்ததும், இந்திய ராணுவம் தொடர்பான படங்கள், வீடியோக்கள், முக்கிய தகவல்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பியதும் தெரிய வந்தது. இந்நிலையில், இன்று சஹ்தேவ் சிங் கோஹில் என்பவரை குஜராத் பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியைச் சேர்ந்த கோஹில், சுகாதாரத்துறை ஊழியர் ஆவார். இவருக்கும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பைச் சேர்ந்த பெண் ஏஜென்டுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பெண் ஏஜென்ட் தன்னை அதிதி பரத்வாஜ் என கோஹிலிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். குஜராத்தில் உள்ள விமானப்படை தளங்கள், எல்லை பாதுகாப்புப்படை முகாம்கள் பற்றிய விவரங்கள் வேண்டும் என, பாக் ஏஜென்ட் கேட்டுள்ளார். அவர் கேட்டதுபோல, குஜராத்திலுள்ள விமானப்படை மற்றும் கடற்படை தளங்கள், எல்லை பாதுகாப்பு முகாம்களின் போட்டோக்கள், வீடியோக்களை வாட்ஸ் அப் மூலம் கோஹில் அனுப்பி வைத்துள்ளார். கோஹில் போனை பறிமுதல் செய்த பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசார் ஆய்வுக்கு அனுப்பினர். அப்போது, பாகிஸ்தான் போன் நம்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் விமானப்படை மற்றும் கடற்படை தளங்கள், ராணுவ முகாம்கள் பற்றிய படங்கள் மற்றும் தகவல்களை கோஹில் 2023 ஜூன் மாதத்தில் இருந்து பகிர்ந்திருப்பது உறுதியானது. ஒருமுறை 40 ஆயிரம் ரூபாயை பாக் பெண் ஏஜென்டிடம் இருந்து கோஹில் பெற்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றத்துக்காக இதுவரை கைதானவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். கோஹில் மட்டும் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை