குஜராத் பாலம் விபத்தில் பதறவைக்கும் பாச தாய் கதறல் | gujarat bridge collpse video | gujarat mother
குஜராத்தின் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் மாஹிசாகர் ஆற்றின் மேல் கட்டிய கம்பீரா என்ற மிகப்பெரிய பாலத்தின் ஒரு பகுதி இன்று காலையில் இடிந்து விழுந்தது. அந்த நேரம் பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரி, 2 வேன், ஒரு ஆட்டோ என 5 வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. டேங்கர் லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கியது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 11 பேர் இறந்தனர். 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆற்றில் தொங்கிய டேங்கர் லாரியை மீட்க ராட்சத கிரேன் வந்தது. டேங்கர் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த கோர சம்பவத்தின் போது தனது குழந்தையை காப்பாற்றக்கோரி உயிர் பிழைத்த தாய் ஒருவர் மரண ஓலமிடும் காட்சி வெளியாகி நெஞ்சை உலுக்கிப்போட்டுள்ளது. அந்த தாயின் பெயர் சோனல். இவர் தனது கணவர், மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் பயணம் செய்தார். பாலம் இடிந்து விழும் போது இந்த வேனும் ஆற்றுக்குள் தலைகுப்புற விழுந்தது. வேனின் எல்லா கதவுகளும் மூடப்பட்டு இருந்தன. உள்ளே இருந்தவர்களால் வெளியே வர முடியவில்லை.