வாசகர்கள் கருத்துகள் ( 2 )
காலம் மாறும்
சீக்கிரம் செய்யப்பா, இந்தியா இன்னும் 10 ஆண்டுகள் முன்னதாகவே வல்லரசு ஆகிவிடும்
டிரம்ப் அதிரடி திட்டம்: இந்தியருக்கு கடும் அதிர்ச்சி H-1B visa and green card US government
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். அந்த வரி விகிதம் இன்று அமலுக்கு வந்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் வர்த்தகத்தில் 66 சதவீத அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு படுபாதகமான ஒரு திட்டத்தை டிரம்ப் தலைமையிலான அரசாங்கம் உருவாக்கி வருகிறது. ஹெச்1பி விசா வழங்கும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இதுபற்றி அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் Commerce Secretary Howard Lutnick ேஹாவர்ட் லுட்னிக் கூறியதாவது: இப்போது நடைமுறையில் இருக்கும் H1B விசா திட்டம் ஒரு மிகப்பெரிய மோசடியாகும். இதனால் அமெரிக்காவிலுள்ள பெரும்பாலான வேலை வாய்ப்புகளை வெளிநாட்டவர்கள்தான் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். அனைத்து பெரிய அமெரிக்க வணிக நிறுவனங்களிலும் அமெரிக்க தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே அதிபர் டிரம்ப்பின் திட்டம்.
காலம் மாறும்
சீக்கிரம் செய்யப்பா, இந்தியா இன்னும் 10 ஆண்டுகள் முன்னதாகவே வல்லரசு ஆகிவிடும்