உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹாம் ரேடியோ மூலம் தகவல் பரிமாற்றம்! | Ham Radio | Bangladesh | border

ஹாம் ரேடியோ மூலம் தகவல் பரிமாற்றம்! | Ham Radio | Bangladesh | border

இந்திய - வங்கதேச எல்லையில் ரகசிய தகவல் பரிமாற்றம்! பயங்கரவாதிகளின் கைவரிசையா? வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டங்கள் வன்முறையாக மாறின. பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நம் நாட்டில் தஞ்சமடைந்தார். அங்கு பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. பயங்கரவாதிகளும் ஊடுருவி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் ஹாம் ரேடியோ மூலம் இந்திய - வங்கதேச எல்லையில் சந்தேகப்படும்படி சங்கேத குறியீடுகளுடன் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஹாம் ரேடியோ என்பது பொழுதுபோக்குடன் கூடிய தகவல் பரிமாற்ற முறை. ரேடியோ அலைவரிசை வாயிலாக தகவல்களை பரிமாறிக் கொள்வர். பேரிடர் காலங்களில் இந்த வசதி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. மேற்கு வங்கத்தில் டிசம்பரில் முதல் முறையாக இது போன்ற சந்தேகப்படும்படியான தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது. இருதரப்பு உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதிகளின் சதியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாதுகாப்பு படையினர் விசாரிக்கின்றனர்.

பிப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ