உலகையே பதற வைக்கும் வீடியோ! ஹமாஸ் செய்த பகீர் |hamas video |israel vs hamas |evyatar David video
காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர போர் நடக்கிறது. 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது கொடிய தாக்குதலை ஹமாஸ் நடத்தியது. ஒரே நேரத்தில் பல ஆயிரம் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். பிணைக்கைதிகளை மீட்க தான் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் போரை துவங்கியது. 250 பிணைக்கைதிகளில் பலர் இறந்து விட்டனர். பலர் மீட்கப்பட்டனர். இன்னும் 49 பேர் ஹமாஸ் வசம் இருக்கின்றனர். அவர்களை மொத்தமாக விடுவித்தால் போரை நிறுத்துவோம் என்கிறது இஸ்ரேல். படிப்படியாக விடுவிப்போம் என்று அடம்பிடிக்கிறது ஹமாஸ். இதனால் தான் போர் நிறுத்தம் வருவதில் இழுபறி நீடிக்கிறது. இந்த நிலையில் இஸ்ரேலை பணிய வைக்க தங்கள் வசம் இருக்கும் பிணைக்கைதி ஒருவரின் அதிர்ச்சி வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. பிணைக்கைதி பெயர் எவ்யதார் டேவிட் வயது 24. இவர் ஜெர்மன் மற்றும் இஸ்ரேல் குடியுரிமை வைத்துள்ளார். ஹமாஸ் வெளியிட்ட வீடியோவில், சுரங்கப்பாதை ஒன்றில் டேவிட் மண்வெட்டியுடன் இருக்கிறார்.