உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்கா பொசுக்கிய பின்லேடன் மகன் உயிருடன் வந்தது எப்படி Osama Bin Laden son Hamza Bin Laden alive

அமெரிக்கா பொசுக்கிய பின்லேடன் மகன் உயிருடன் வந்தது எப்படி Osama Bin Laden son Hamza Bin Laden alive

பின்லேடன் மகன் இன்னும் சாகல உலகை மிரள வைத்த ரிப்போர்ட்! ஒசாமாவை மிஞ்சும் தாக்குதலுக்கு சதி! அல்-குவைதா அமைப்பின் பயங்கரவாத தலைவனான கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் இருப்பதாகவும், அவன் தலைமையில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 2001 செப்டம்பர் 11ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்தி உலகையே அச்சுறுத்தியவர் அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன். இந்த தாக்குதலில் மொத்தம் 2973 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து களமிறங்கிய அமெரிக்க படையினர் அந்த அமைப்பை 2011ல் வேரோடு அழித்ததுடன், பாகிஸ்தானில் இருந்த ஒசாமா பின்லேடன் மீது அதிரடி தாக்குதல் நடத்தி கொன்றனர். பின்னர் ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின்லேடனும், 2019ல் அமெரிக்க விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். எனினும் ஹம்சா பின்லேடன் இறந்ததற்கான எந்த ஆதாரத்தையும் அப்போது அமெரிக்க அரசு வெளியிடவில்லை. இந்த நிலையில் தான் நம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் பாஞ்சிர் மாகாணத்தின் தாரா அப்துல்லா கேல் மாவட்டத்தில் ஹம்சா பின்லேடன் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹம்சா பின்லேடன் தலைமையில், அல்-குவைதா பயங்கரவாத அமைப்பு உயிர்ப்புடன் இயங்கி வருவதாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மிரர் நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. ஹம்சா பின் லேடனை சுற்றி துப்பாக்கி ஏந்திய 450 பயங்கரவாதிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை