/ தினமலர் டிவி
/ பொது
/ உபியை உலுக்கிய கோர மரணங்கள்-அதிர்ச்சி சம்பவம் hathras incident | Stampede at religious event In UP
உபியை உலுக்கிய கோர மரணங்கள்-அதிர்ச்சி சம்பவம் hathras incident | Stampede at religious event In UP
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் அருகே ரதிபன்பூரில் சிவ பெருமானுக்கான ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து பக்தர்கள் வீடு திரும்ப இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மிகப்பெரிய அளவில் நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் மூச்சுத்திணறி கொத்துக்கொத்தாக மயக்கம் போட்டு விழுந்தனர். பலர் உயிருக்கு போராடினர். சம்பவ இடத்திலேயே ஏராளமானோர் மரணம் அடைந்தனர். எங்கும் சடலங்கள் நிரம்பி கிடந்தன. உயிருக்கு போராடிய பலர் பக்கத்தில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
ஜூலை 02, 2024