உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆந்திர நபர் கைது! பின்னணி குறித்து போலீஸ் விசாரணை | Hawala money Seized | Kerala Police

ஆந்திர நபர் கைது! பின்னணி குறித்து போலீஸ் விசாரணை | Hawala money Seized | Kerala Police

கோவையில் இருந்து கேரளா செல்லும் பஸ்சில் ஆவணமின்றி பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கோவை டு பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் கேரளா போதை தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்கு இடமான ஒரு பயணியின் பையில் கட்டுக்கட்டாக 500 நோட்டுகள் சிக்கியது. அவரிடம் விசாரித்தனர். ஆந்திராவைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பது தெரிந்தது. எண்ணிக்கை முடிவில் மொத்தம் 71 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. பணத்திற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் சிவப்பிரகாஸ் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட ஹவாலா பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பணத்தை அனுப்பி வைத்தவர் யார்? யாருக்காக பணம் கொண்டு செல்லப்படுகிறது என்பது பற்றி, போலீஸ் மற்றும் வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை