/ தினமலர் டிவி
/ பொது
/ பணியிட பாலியல் தொல்லை: சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவ |HCL Case sexual harassment case| high court
பணியிட பாலியல் தொல்லை: சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவ |HCL Case sexual harassment case| high court
சென்னை அம்பத்தூரில் உள்ள HCL நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றிய ஒரு ஆண், தனக்கு கீழே பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்தது. அந்நிறுவனத்தின் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா குழுவிடம் அந்த உயரதிகாரி மீது 3 பெண்கள் புகார் அளித்தனர். நாங்கள் வேலை செய்வதை கண்காணிப்பதைப் போல பாவலா செய்தபடி, எங்கள் சேருக்கு பின்னால் மிக நெருக்கமாக நிற்கிறார். இதை இப்படி செய், அதை அப்படி செய் என தோளை தொட்டு பேசுகிறார். கைகுலுக்கும்படி கட்டாயப்படுத்துகிறார் என அந்த பெண்கள் புகாரில் கூறியிருந்தனர்.
ஜன 23, 2025