இந்த நேரங்களில் மக்கள் வெளியே வர வேண்டாம்! | Heat wave | Meteorological Department | Weather | Summe
இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, உபி, குஜராத், பீகார், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை ஏற்படலாம். மேற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை இயல்பாக இருக்கும். குறைந்தபட்ச வெப்ப நிலை, பெரும்பாலான மண்டலங்களில் இயல்பை காட்டிலும் அதிகமாக இருக்கும். வழக்கமாக ஏப்ரல் முதல் ஜூ்ன் வரை 4 முதல் 7 வெப்ப அலை நாட்கள் தான் இருக்கும். இப்போது வழக்கத்தை காட்டிலும் இரண்டு முதல் நான்கு வெப்ப அலை நாட்கள் கூடுதலாக ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை குறைக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. வெப்ப அலை நாட்களை சமாளிக்க கோடை காலத்தில் 9 முதல் 10 சதவிகிதம் வரை கூடுதல் மின்சார தேவை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.