வரலாறு காணாத மழையால் தத்தளிக்கும் மும்பை | Heavy Rain | Mumbai Rain News | IMD
ென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் lமகாராஷ்டிராவில் 2 நாட்களாக இரவு, பகல் என தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. இடைவிடாத மழையால் வர்த்தக நகரான மும்பை தத்தளிக்கிறது. பல பகுதிகளில் மழையளவு 100 மில்லி மீட்டரை தாண்டி விட்டது. அதிகபட்சமாக விர்க்ஹோலியில் நேற்று மட்டும் 139.5 மிமீ மழை பெய்துள்ளது. மும்பை நகரில் மட்டும் 8 மணிநேரத்தில் 177 மிமீ மழை பதிவாகி உள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் பதிவான மழை அளவுகளை விட அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை மற்றும் வெள்ளநீரில் பலமணி நேரம் வாகன ஓட்டிகள் தவித்தபடியே இருக்கும் சூழல் உள்ளது. சில சுரங்கப்பாதை முழுதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ரயில், விமான சேவைகளும் மழை, வெள்ள பாதிப்பில் இருந்து தப்பவில்லை. மும்பை நகரம் மற்றும் புறநகர் பகுதிகள், ராய்காட், ரத்னகிரி, சத்தாரா, கோல்ஹாபுர், புனே என பல நகரங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இடைவிடாத மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை, மும்பை பல்கலை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்திற்கு 7 பேர் பலியானதாக அம்மாநில முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே செல்ல வேண்டாம் என மக்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.