உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மயிலாடுதுறையில் இரவு முதல் கொட்டும் கனமழை | Heavy Rain | Orange alert | Boats are in port

மயிலாடுதுறையில் இரவு முதல் கொட்டும் கனமழை | Heavy Rain | Orange alert | Boats are in port

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், புதுச்சேரியில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. அதன்படி டெல்டா பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி மயிலாடுதுறையில் 10 மி.மீ, மணல்மேடு 4 மி.மீ, சீர்காழி 14.80 மி.மீ, கொள்ளிடம் 3 மி.மீ, தரங்கம்பாடி 22 மி.மீ, செம்பனார்கோவில் 22.80 மி.மீ. என சராசரியாக 12.93 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கனமழை எச்சரிக்கையால் மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 28 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ