உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 55 km சூறை காற்றுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை Heavy rain alert for Tamil Nadu | TN weather today

55 km சூறை காற்றுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை Heavy rain alert for Tamil Nadu | TN weather today

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்கிறது. சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 11ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த ஒரு வாரத்தில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதையும் வானிலை மையம் சுட்டிக்காட்டி உள்ளது. அதன்படி 7ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ