சூறாவளியுடன் கனமழை;பரிதாபமாக இறந்த 14 பேர் Heavy rain at Gujarat| Hailstorm in Gujarat| Gujarat bad
குஜராத்தில் கேடா, காந்திநகர், வதோதரா, மெஹசானா உள்ளிட்ட பல இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை, விளம்பர பலகைகள் காற்றில் பறந்தன. டூவீலரில் சென்றவர்கள் நிலைத்தடுமாறினர். பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர். கேடா மாவட்டத்தில் 4 பேர், வதோதராவில் 3, ஆமதாபாத், தஹோட், ஆரவல்லியில் தலா 2, ஆனந்த் மாவட்டத்தில் ஒருவர் என, மொத்தம் 14 பேர் இறந்தனர். மரங்கள் விழுந்தும், விளம்பர பலகைகள் சாய்ந்தும், மின்சாரம் தாக்கியும் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. லிம்கேடாவில் வீசிய சூறாவளியில், 15க்கு அதிகமான குடிசைகள் சேதமடைந்தன. சூறாவளி, இடி, மின்னலுடன் கூடிய கனமழையால் குஜராத் மாநிலம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.