உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விடிய விடிய பெய்த மழையால் மிதக்கும் டில்லி | Heavy rain | Delhi | Traffic jam | Water logged

விடிய விடிய பெய்த மழையால் மிதக்கும் டில்லி | Heavy rain | Delhi | Traffic jam | Water logged

தலைநகர் டில்லியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சஃப்தர்ஜங்கில் உள்ள நகரின் முதன்மை வானிலை நிலையத்தில் 29.6 மி.மீ., மழையும், ரிட்ஜ் நிலையத்தில் 69.4 மி.மீ., மழையும் பெய்துள்ளது. டில்லி பல்கலைக்கழகம் பகுதியில் 56.5 மி.மீ., லோதி சாலையில் 28.2 மி.மீ., ஆயா நகர் 19.5 மி.மீ., பாலம் பகுதியில் 18 மி.மீ., மழையும் பதிவாகி உள்ளது. ஒரு நாள் இரவில் கொட்டிய மழையால் சாலைகள், தாழ்வான இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் நீந்தி செல்லும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி