உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வட மாநிலங்களில் திடீர் கனமழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி Heavy Rain lashes Karnataka Kerala

வட மாநிலங்களில் திடீர் கனமழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி Heavy Rain lashes Karnataka Kerala

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டதால் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. வானிலை மையம் எச்சரித்ததுபோலவே அங்கு கனமழை வெளுத்து வாங்கியது. வீடுகள், கோயில்களுக்குள் வெள்ளம் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. நேற்று, மழை நீர் தேங்கிய குட்டையில் விழந்து 8 வயது சிறுமி பலியான நிலையில், மழை நீர் கால்வாயில் விழுந்த மூதாட்டி, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். தொடர் கனமழையால் அவரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கொல்லம், கோழிக்கோடு, திருவனந்தபுரம், திருச்சூர் உட்பட மாநிலம் முழுதும் கனமழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. கர்நாடகாவின் உடுப்பி, தக்ஷிண கன்னடா, உத்தர கன்னடா, மங்களூரு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை