ஊற்றும் கனமழை... முதல் புயல் சின்னம் ENTRY | TN Weather | Heavy Rain Today | IMD Chennai Updates
தமிழகத்தில் பரவலாக தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. அதன் அறிக்கை: வடக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வங்கதேச பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் மேல் ஜூலை 3ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். வானிலை மாற்றஙகள் காரணமாக இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை 3 நாட்களுக்கு வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். ஜூலை 3ம் தேதியை பொறுத்தவரை கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும். தமிழகத்தின் மற்ற பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. #TNWeather #HeavyRainToday #IMDChennaiUpdates #ChennaiWeather #RainInChennai #WeatherAlert #TamilNaduRain #StaySafe #RainyDay #WeatherForecast #ChennaiUpdates #Rainfall #ThisWeekWeather #ChennaiStorms #MonsoonSeason #LocalWeather #ChennaiLife #WeatherUpdate #RainyWeather #ForecastToday