உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது Heavy rain in Mumbai, Gujarat| Assam

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது Heavy rain in Mumbai, Gujarat| Assam

நாட்டின் மேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெய்யும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் மும்பையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதித்தது. மழை நீர் நிரம்பியதால் அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது. ஏர்போர்ட் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து முடங்கியது. விமானங்கள் வருகை, புறப்பாட்டிலும் கால தாமதம் ஏற்பட்டது. தானே மாவட்டம் பிவண்டியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் அவதி அடைந்தனர். புனேவிலும் கனமழை வெளுத்து வாங்கியது.

ஜூலை 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை