உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் காயம்! Heavy Rain | Tiruppur | 4 Injured

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் காயம்! Heavy Rain | Tiruppur | 4 Injured

திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. அங்கு 50வது வார்டு காங்கேயம்பாளையம் ஏடி காலனி பகுதியில் குமார் என்பவர் வீடு உள்ளது. மனைவி சசிகலா, மகன் கிஷோர், மகள் கீர்த்தனாவுடன் குமார் வசித்து வந்தார். கனமழை காரணமாக குமார் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நான்கு பேரும் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் நான்கு பேரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பிடலில் சேர்த்தனர்.

நவ 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !