உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 30 கிராமங்களில் வெள்ள புகும் அபாயம் Tamilnadu puducherry heavy rain government tandora warning

30 கிராமங்களில் வெள்ள புகும் அபாயம் Tamilnadu puducherry heavy rain government tandora warning

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 30-ம் தேதி பெய்த வரலாறு காணாத மழையால் வீடூர் மற்றும் சாத்தனூர் அணைகள் முழுவதுமாக நிரம்பி நிரம்பி முழு கொள்ளளவை எட்டியன. உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் தென்பெண்ணையாறு மற்றும் சங்கராபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புதுச்சேரியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழைநீர் புகுந்து வீடுகளை சூழ்ந்தது.. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மீண்டும் சாத்தனூர் மற்றும் வீடுர் அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளன இதனால் உபரிநீர் இன்று திறக்கப்பட்டது. சாத்தனூர் அணையிலிருந்து 13,000 கன அடி நீரும் வீடூர் அணையிலிருந்து 2000 கன அடி நீரும் இன்று வெளியேற்றப்பட்டது. இதனால் ஆற்றின் ஓரம் உள்ள தவளக்குப்பம், புரணாங்குப்பம், நோணாங்குப்பம், டி. என். பாளையம், கரிக்கலாம்பாக்கம், வில்லியனூர், கணுவா பேட்டை, சோரியாங் குப்பம், பாகூர், உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கிராமங்களில் தண்டோரா போட்டு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். பாதுகாப்பான இடஙகளுக்கு உடனடியாக செல்ல வேண்டும் என அறிவித்து வருகின்றனர்.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை