12 மாவட்டங்களை மிரட்டும் கனமழை எச்சரிக்கை | heavy rain alert for Tamil Nadu | monsoon season | IMD
மதியம் வரை உஷாரா இருங்க வெளுக்கப் போகுது கனமழை திடீரென வந்த அலர்ட் கோவை, நீலகிரி, தென்காசி உட்பட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவையில் இன்று நண்பகல் வரை மிக கனமழை கொட்டித்தீர்க்கும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நண்பகல் வரை கனமழை வெளுத்து வாங்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில், நாளை மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை தொடரும்.