உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / NCP தலைவரை பிக்கப் செய்ய சென்ற போது விபத்து | Helicopter crashes | Pilots | Pune Bavdhan

NCP தலைவரை பிக்கப் செய்ய சென்ற போது விபத்து | Helicopter crashes | Pilots | Pune Bavdhan

மலையில் மோதியதால் தீப்பிடித்த ஹெலிகாப்டர் 2 பைலட்கள் இன்ஜினியர் பலி மகாராஷ்டிரா மாநிலம், புனேவை சேர்ந்த ஹெரிடேஜ் ஏவியேஷன்ஸ் நிறுவனம் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு இயக்கி வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தது. அக்கட்சியை சேர்ந்த தலைவர் சுனில் தட்கரேவை பீட் Beed நகரத்தில் இருந்து மும்பைக்கு அழைத்து செல்வதற்காக புனேவில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டது. பைலட்டுகள் பரம்ஜித் சிங், ஜி.கே. பிள்ளை, இன்ஜினியர் பிரீதம் பரத்வாஜ் ஹெலிகாப்படரில் இருந்தனர். புனே கோல்ப் மைதானத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் மலைப்பாங்கான பாவ்தான் புத்ருக் என்ற இடத்தில் சென்ற போது விபத்தில் சிக்கியது. கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.

அக் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !