உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழ் பட இயக்குநரால் ஒரு வருஷம் செக்ஸ் கொடுமை | Hema committee report| Sexual Harrasment | Actress

தமிழ் பட இயக்குநரால் ஒரு வருஷம் செக்ஸ் கொடுமை | Hema committee report| Sexual Harrasment | Actress

மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டியின் அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அறிக்கை வெளியான பிறகு நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்தும், அத்துமீறிய நடிகர்கள், இயக்குநர்கள் குறித்தும் புகார் அளிக்க துவங்கி உள்ளனர். 90களில் தமிழ், மலையாள படங்களில் நடித்த நடிகை சவுமியா தமிழ் சினிமா இயக்குநர் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை கொட்டியுள்ளார். மோகன்லாலுடன் அத்வைதம் படத்திலும், நீலகுறுக்கன், Poochakkaru Mani Kettum போன்ற மலையாள படங்களில் நடித்தவர் நடிகை சவுமியா. தமிழில் ஒரு படத்தில் நடித்தார். ஓரிரு படங்களில் மட்டுமே நடித்த இவர் அதன்பின் சினிமாவை விட்டே விலகிவிட்டார். இப்போது பாலியல் புகார் தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, எனக்கு அப்போது 18 வயது இருக்கும். காலேஜ்ல முதலமாண்டு படிச்சுட்டு இருந்தேன். எனக்கு பக்கத்து வீட்ல நடிகை ரேவதி இருந்தாங்க. அவங்கள பாத்துட்டு நானும் சினிமா மாயைல இருந்தேன். காலேஜ்ல இருந்த டிராமா குரூப் மூலமா எனக்கு அறிமுகமான ஒருத்தரு, அவரோட தமிழ் படத்துல என்னை ஹீரோயினா நடிக்க கேட்டாரு.. என்னோட அப்பா, அம்மாவை சந்திச்சு அட்வான்ஸும் கொடுத்தாரு. அவரோட மனைவி தான் படத்தை டைரக்ட் செய்ய போறதா சொன்னாங்க. ஆனா அவரு தான் டைரக்ட் பண்ணாரு. ஸ்க்ரீன் டெஸ்ட்க்கும், டான்ஸ் ரிகர்சலுக்கும் அடிக்கடி நான் அவங்க வீட்டுக்கு போவேன். என்னை அன்பா பாத்துக்கிட்டாங்க.. எனக்கு ஜூஸ்லாம் கொடுத்து அவங்க பொண்ணு மாதிரினு சொன்னாங்க., ஆனா அவங்க பொண்ணு இவர் ரேப் பண்ணதால வீட்டை விட்டு போயிட்டா. அதலாம் பொய்யினு அவங்க சொன்னாங்க.. ஒருநாள் அவரோட மனைவி வீட்ல இல்லாதப்போ, என்னை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தாரு. நான் அதிர்ச்சியில உறைஞ்சு போயிட்டேன்.. ஆனா என்னால அத வெளியில சொல்ல முடியல. வெக்கமாவும், குற்ற உணர்ச்சியாவும் இருந்துச்சு. நாளாக, நாளாக அவரோட ஆதிக்கம் அதிகமாச்சி.. ஒருநாள் என்னை பலாத்காரம் பண்ணாரு.. இந்த கொடுமை ஒரு வருஷம் நடந்திச்சி.. அவரோட செக்ஸ் அடிமையா என்ன நடத்துனாரு.. அந்த படம் முடிஞ்சதுக்கு அப்புறமும் இது தொடர்ந்துச்சு. என்னோட அந்தரங்க உறுப்புல இரும்பு ராடை பயன்படுத்தி கொடுமை படுத்துவாரு.. என்னை பொண்ணு மாதிரினு சொன்னவரு என்கூட குழந்தை பெத்துக்கணும்னு சொன்னாரு.. உடல் அளவுலயும், மன அளவிலயும் அவரால ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தேன்.. இதே மாதிரி மலையாள திரையுலகுல என்கூட நடிச்ச நடிகர்கள், இயக்குநர்கள், பட டெக்னீஷியன்ஸ் பலரால நான் பாலியல் வன்கொடுமைய அனுபவிச்சேன்.

செப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !