உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜார்க்கண்ட்டின் 14வது முதல்வராகிறார் ஹேமந்த் சோரன் | Hemant Soren | Jharkhand CM | JMM leader

ஜார்க்கண்ட்டின் 14வது முதல்வராகிறார் ஹேமந்த் சோரன் | Hemant Soren | Jharkhand CM | JMM leader

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 56ல் வென்றுள்ளனர். ஜே.எம்.எம் 34, காங்கிரஸ் 16, ஆர்.ஜே.டி 4, சி.பி.ஐ - எம்.எல் 2 இடங்களை கைப்பற்றி உள்ளனர். ஹேமந்த் சோரன் நில அபகரிப்பு தொடர்பான பண மோசடி வழக்கில் கைதாகி ரிலீசான பின் நடந்த முதல் தேர்தலில் மீண்டும் வெற்றி கிடைத்ததால் பெருமளவில் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் இன்று மாலை ராஞ்சியில் இண்டி கூட்டணி எம்எல்ஏ கூட்டம் நடந்தது. அதில் ஹேமந்த் சோரன் சட்டசபை தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

நவ 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி