உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசியல் சதியில் இருந்து மீண்டு வந்தேன்: ஹேமந்த் Hemant Soren CM| Jharkhand CM Soren| JMM| ED Case

அரசியல் சதியில் இருந்து மீண்டு வந்தேன்: ஹேமந்த் Hemant Soren CM| Jharkhand CM Soren| JMM| ED Case

ஜார்க்கண்ட்டில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதாதளம் கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது. ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வரானார். இந்நிலையில், ஹேமந்த் சோரன் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் அவர் ஈடுபட்டதாக கடந்த ஜனவரி இறுதியில் அலாக்கதுறை அவரை கைது செய்தது. இதையடுத்து, ஹேமந்த் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் ேஹமந்த் அடைக்கப்பட்டார். ஜேஎம்எம் மூத்த தலைவரும், ஹேமந்த்தின் நம்பிக்கைக்கு உரியவருமான சம்பய் சோரன் பிப்ரவரி முதல் வாரத்தில் முதல்வரானார்.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை