/ தினமலர் டிவி
/ பொது
/ ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனி செயலர் வீட்டில் ஐ.டி. ரெய்டு | Hemanth Soren's | House Raided
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனி செயலர் வீட்டில் ஐ.டி. ரெய்டு | Hemanth Soren's | House Raided
ஜார்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு நடக்கிறது. இங்கு மொத்தம் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 13, 20ல் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா முயற்சிக்கிறது. அவர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரனின் தனி செயலாளர் சுனில் ஸ்ரீவஸ்தவா வீடு உள்பட 17 இடங்களில் காலை முதல் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
நவ 09, 2024