உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை தீர்த்து கட்டியது இப்படித்தான் | Iran spy tip helped isreal| hezbollah

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை தீர்த்து கட்டியது இப்படித்தான் | Iran spy tip helped isreal| hezbollah

ஹிஸ்புல்லா தலைவரை முடிக்க ஈரான் உளவாளி கொடுத்த டிப்ஸ்! நேரம் பார்த்து அடித்த இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. ஹிஸ்புல்லா முக்கிய தளபதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி நிலைகுலைய செய்து வருகிறது இஸ்ரேல். ராட்வனா படை தளபதி இப்ராகிம், ஏவுகணை பிரிவு தலைவர் இப்ராகிம் குபைசி, ட்ரோன் படை தளபதி முகமது ஹுசைன் சரூர் என அடுத்தடுத்து படை தளபதிகளை கொன்று ஹிஸ்புல்லாவுக்கு பயத்தை காட்டியது இஸ்ரேல். லேட்டஸ்ட் ஆக ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கதையை இஸ்ரேல் முடிந்தது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் 6 மாடி கட்டிடத்தின் தரைப்பகுதியில் ஹிஸ்புல்லா தலைமையகம் செயல்பட்டு வந்தது. அந்த கட்டடத்தை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. கட்டடம் தரைமட்டமானது. அங்கிருந்த ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். ஹசன் நஸ்ரல்லா எப்போதும் ஹிஸ்புல்லா தலைமையகத்தில் இருக்க மாட்டார். முக்கிய கூட்டம் நடக்கும்போது மட்டும் வந்து செல்வாராம். அதுவும் மிக ரகசியமாக இருக்கும். அவர் அங்கு வருவது பற்றி ஈரானை சேர்ந்த சீக்ரெட் ஏஜென்ட் இஸ்ரேலுக்கு தகவல் கொடுத்தாக பிரெஞ்சு நாளிதழ் Le Parisien செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலின் தீவிரம், தளபதிகள் கொல்லப்பட்டது தொடர்பாக ஹிஸ்புல்லா சீனியர்களுடன் ஆலோசனை நடத்த தலைமையகத்துக்கு நஸ்ரல்லா சென்று இருக்கிறார். இதை மோப்பம் பிடித்தார் ஈரானிய உளவாளி. நஸ்ரல்லா எப்போது தலைமையகத்தில் இருப்பார் என்பது பற்றி, அவர் வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பே இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை