பேஜர் சப்ளை செய்த இளைஞருக்கு சிக்கல் hezbollah| pager blasts| warrant for kerala businessman
லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்திய பேஜர் சாதனங்கள் சமீபத்தில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இதில் 30க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். ஹஸ்புல்லாக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் இந்த தாக்குதலை நடத்தியது. இந்த பேஜர் சாதனங்களை விநியோகம் செய்தது பல்கேரியாவை சேர்ந்த நோர்டா குளோபல் நிறுவனம். இந்த நிறுவனம் கேரளாவின் வயநாட்டை சேர்ந்த 39 வயதான ரின்சன் ஜோஸ் என்பவருக்கு சொந்தமானது. நார்வே நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசிக்கிறார் ரின்சன். ஹிஸ்புல்லாக்களின் பேஜர்கள் வெடித்ததில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தார். வர்த்தம் தொடர்பாக கடந்த வாரம் அமெரிக்கா சென்ற ரின்சன் அதன் பின் காணாமல் போனார். அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நார்வே போலீசார், சர்வதேச வாரன்ட் பிறப்பித்துள்ளனர். அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.