உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 'சாமி மீது பயம் வேண்டாமா?' நீதிபதி சரமாரி கேள்வி | High Court | Thiruverkadu Karumariamman

'சாமி மீது பயம் வேண்டாமா?' நீதிபதி சரமாரி கேள்வி | High Court | Thiruverkadu Karumariamman

திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினர் வளர்மதி. இவர் கோயிலில் பெண் பணியாளர்களுடன் சேர்ந்து நடனமாடியும் , சினிமா காட்சி போல நகைச்சுவையாகவும் சில ரீல்ஸ் வீடியோக்களை போட்டு இருந்தார். கருவறை அருகே இவர்கள் எடுத்த வீடியோ வைரல் ஆனது. வளர்மதி மீது நடவடிக்கை எடுக்க நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெய பிரகாஷ் ஐகோர்ட்டில் மனு செய்தார். புனிதமான கோயில் வளாகத்தில் ரீல்ஸ் வீடியோ எடுப்பது பக்தர்களின் மனதை புண்படுத்துவது போல் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறநிலைய துறைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன் இன்று விசாரணைக்கு வந்தது. கோயில் வளாகத்தில் சாமி மீது பயம் இருக்க வேண்டாமா? கோயிலுக்குள்ளேயே ரீல்ஸ் எடுத்தால் சாமிக்கு என்ன மரியாதை உள்ளது? இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நீதிபதி கண்டனம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார். விசாரணை அக்டோபர் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை