/ தினமலர் டிவி
/ பொது
/ சும்மா அறிக்கை கொடுத்தால் போதாது: விளாசும் ஐகோர்ட் | High Court | Vengavayal
சும்மா அறிக்கை கொடுத்தால் போதாது: விளாசும் ஐகோர்ட் | High Court | Vengavayal
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ல் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது. வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் வெள்ளனுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் விசாரணை மந்தமாக இருந்ததால் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால் சிபிசிஐடி விசாரணையும் கண்துடைப்பாக உள்ளது. வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என திருவள்ளூரை சேர்ந்த ராஜ்கமல் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
ஜூலை 09, 2024