இந்தி அழிப்பு போராட்டத்தில் திமுகவினர் செய்த அலப்பறைகள் hindi imposition NEP tenkasi district dmk
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தி திணிப்பை எதிர்த்தும் திமுக சார்பில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது. தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், பாவூர்சத்திம், தென்காசி, கடையநல்லூர் ரயில் நிலையஙகளில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி ரயில் நிலையத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் இந்தி எழுத்துக்களை அழித்து உதயசூரியன் சின்னத்தை வரைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ப்ரத் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் செல்லத்துரை தலைமையில் திமுகவினர் இந்தி எழுத்துக்களை அழிக்க வந்தனர். ஏணி மீது ஏறிய செல்லத்துரை இந்தி எழுத்துக்களை அழிப்பதற்கு பதிலாக ஆங்கில எழுத்துக்கள் மீது கறுப்பு பெயிண்டை அடிக்கத் துவங்கினார். உடனே ஒரு ஆதரவாளர் அண்ணே; நாம இந்திக்குதான் எதிர்ப்பு இங்கிலீஷுக்கு இல்ல என சொல்ல, செல்லத்துரை உஷாரானார்.