/ தினமலர் டிவி
/ பொது
/ மஹாமிருத்யுஞ்சய் மந்திரம் சொல்லி சிறப்பு பூஜை | Hindu Sena conducts special hawan for Trump
மஹாமிருத்யுஞ்சய் மந்திரம் சொல்லி சிறப்பு பூஜை | Hindu Sena conducts special hawan for Trump
டிரம்ப் நீண்ட ஆயுளுக்காக இந்து சேனா சிறப்பு யாகம் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். கடந்த 13ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். குண்டு பட்டதில் காதில் ஏற்பட்ட காயத்துக்காக ட்ரம்ப் சிகிச்சைபெற்று வருகிறார். இந்நிலையில் டில்லியில் டிரம்ப் விரைவில் உடல்நலம் பெறவும், நீண்ட ஆயுளுக்காகவும் இந்து சேனா அமைப்பின் சார்பில் சிறப்பு யாகம் நடந்தது.
ஜூலை 17, 2024