உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோயில் இடிப்பை எதிர்த்து போராட்டத்தில் குதித்த சிறுபான்மையினர் Hindu Temple demolished in Dhaka | B

கோயில் இடிப்பை எதிர்த்து போராட்டத்தில் குதித்த சிறுபான்மையினர் Hindu Temple demolished in Dhaka | B

வங்கதேச தலைநகர் டாக்காவின் கில்கெட் பகுதியில் அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் வழிபாட்டு தலத்தை அரசு இடித்து தள்ளி இருக்கிறது. வழிபாடு நடந்துகொண்டிருந்த கோயிலில், கடவுளின் சிலையை கூட அகற்றாமல் கோயிலை இடித்து தள்ளியதாக அங்குள்ள ஹிந்துக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினர் வேதனை தெரிவித்துள்ளனர். டாக்காவில் பல்வேறு மசூதிகள் உள்ளன. ஆனால், இந்துக்கள் வழிபாட்டிற்கென இந்த ஒரே ஒரு கோயில் தான் இருந்தது. ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். சரி அப்படியே இருந்தாலும், கோயிலை இடிப்பதற்கு முன் நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும். கோயிலில் உள்ள கடவுள் சிலை மற்றும் பிற பொருட்களை அகற்றிய பின் கோயிலை இடித்திருக்கலாம். ஆனால், அதற்கு எவ்வித அவகாசமும் கொடுக்காமல், அவசர கதியில் அரசு புல்டோசரை பயன்படுத்தி கோயில் உடனடியாக இடிக்கப்பட்டது. காளி மாதா சிலையுடன் கோயிலை இடித்தது இந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாக்க முகமது யூனுஸ் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இடிக்கப்பட்ட கோயிலுக்கு பதிலாக, வேறு இடத்தில் இந்துக்களின் வழிபாட்டிற்கென ஒரு கோயில் கட்டித் தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையே வங்கதேச அரசின் செயலை கண்டித்து, அங்கு வசிக்கும் இந்துக்கள், புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் அடங்கிய சிபான்மையின அமைப்பினர் டாக்காவில் போராட்டம் நடத்தினர். அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர்களை கையில் ஏந்தி கோஷமிட்டனர். இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் மனீந்திர குமார் நாத் கூறுகையில், டாக்காவின் மையப்பகுதியில் அமைந்திருந்த காளி கோயிலை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அரசு நிர்வாகம் இடித்து தள்ளியது கண்டிக்கத்தக்கது. எங்களுக்கு வேறு வழிபாட்டு தலம் இல்லை. அதை அரசு அமைத்துத் தர வேண்டும். ரயில்வே நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எந்த ஆட்சேபனமும் இல்லை. ஆனால், வழிபாடு நடந்து கொண்டிருந்த கோயிலை இடிக்கும் முன், அதற்குரிய மரியாதையை அளித்திருக்கலாம். முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேசத்தை ஆளும் இடைக்கால அரசு, இங்குள்ள மத சிறுபான்மையினரை நசுக்குகிறது. சிறுபான்மை மக்களை பாதுகாக்கவும், அவர்களுக்கான உரிமைகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஜூன் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை