உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காரை ஓட்டி மோதிவிட்டு நடிகை எஸ்கேப்

காரை ஓட்டி மோதிவிட்டு நடிகை எஸ்கேப்

ெங்களூரு பேட்ராயனபுராவை சேர்ந்தவர் அனிதா, 24. டெய்லர். இவரது தோழி அனுஷாவுக்கு கடந்த 4 ம் தேதி இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அந்நேரம் ஆட்டோ எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மருத்துவமனையில் அட்மிட் செய்ய அனுஷாவை உறவினர் கிரண் பைக்கில் ஏற்றிக் கொண்டார். உடன் அனிதாவும் வண்டியில் சென்றார். அதிகாலை 1:30 மணிக்கு பேட்ராயனபுரா எம்.என்.சாலையில் சென்றபோது, வேகமாக வந்த ஒரு கறுப்பு நிற கார், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் பறந்தது. பைக்கில் இருந்து விழுந்த, 3 பேரும் காயம் அடைந்தனர். அனிதாவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு மூட்டு விலகியது. தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். ஆஸ்பிடலில் இருந்த டிஸ்சார்ஜ் ஆன பிறகு கடந்த 8 ம்தேதி, பேட்ராயனபுரா போலீசில் கிரண் புகார் செய்தார். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆராய்ந்தனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கறுப்பு நிற காரின் நம்பரை கண்டுபிடித்தனர். பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை ஓட்டி வந்தது கன்னட டிவி நடிகை திவ்யா சுரேஷ் வயது 32 என்பது தெரிய வந்தது. கன்னட பிக்பாஸ் ேஷாவில் பங்கெடுத்தபோது பரபரப்பாக பேசப்பட்டவர். இதையடுத்து, திவ்யாவின் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். அலட்சியமாக வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திவ்யாவை இன்று விசாரணைக்கு போலீசார் அழைத்தனர். அதன்படி பேட்ராயனபுரா போலீஸ் நிலையத்தில் இன்று மாலை திவ்யா ஆஜரானார். நான் மெதுவாகத்தான் காரை ஓட்டி வந்தேன்; அதிகாலை நேரம் என்பதால் காரை நிறுத்தினால் பிரச்னை பெரிதாகும் என நினைத்து வேகமாக ஓட்டிச் சென்று விட்டேன் என கூறினார். இவ்வளவு நாள் போலீசிடம் தானாக முன்வந்து விபத்து பற்றி சொல்லாதது ஏன்? என கேட்டதற்கு சின்ன காயம்; புகார் கொடுத்திருக்க மாட்டார்கள் என நினைத்தேன் என்றார். அதிகாலையில் காரை ஓட்டி வர என்ன காரணம்? பார்ட்டிக்கு போயிருந்தாரா? மது குடித்திருந்தாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்தபோது மது குடிக்கவில்லை எனவும் திவ்யா கூறினார். மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது வர வேண்டும் என திவ்யாவை போலீசார் அனுப்பி வைத்தனர். அவர் காரை நிறுத்தி நிறுத்தி ஓட்டி வந்த விதம் போலீசாரை சந்தேகத்துக்குள்ளாக்கி உள்ளது. அதனால் அவர் குடித்திருந்தாரா? இல்லையா? என தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே, விபத்தில் காயமடைந்த அனிதா கூறியதாவது: காரை ஓட்டியது பெண் என்று மட்டும் எங்களுக்கு தெரிந்தது. நடிகை திவ்யா சுரேஷ் என்பது இப்போதுதான் தெரிந்தது. வீட்டிலேயே தையல் மெஷினில் துணி தைத்துக்கொடுத்து பிழைப்பு நடத்தி வந்தேன்; எனது கால் மூட்டு விலகி உள்ளதால் ஓராண்டுக்கு காலை தரையில் ஊன்றக்கூடாது என டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். என் வயிற்றுப் பிழைப்புக்கு யார் வழி சொல்வது? ஒரு மனிதாபிமான அடிப்படையில் கூட, இதுவரை நடிகை திவ்யா எங்களிடம் வந்து பேசவில்லை. தவறு செய்த திவ்யா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனிதா கோபத்துடன் சொன்னார். 3 பேர் மீது காரை மோதி விட்டு நடிகை திவ்யா சுரேஷ் தப்பிச் சென்ற சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. #HitAndRun #BengaluruPolice #RoadAccident #DivyaSuresh #BiggBossContestant #CrimeNews #InjuryReport #YoungWoman #AngryReaction #BengaluruNews #TrafficIncident #LegalInquiry #PublicSafety #ViralNews #BreakingNews #AccidentInvestigation #SocialMediaBuzz #TrendingNow #JusticeForVictims

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை