ஆந்திராவை உலுக்கிய சம்பவம்: 5 பேருக்கு தூக்கு: பரபரப்பு தகவல்Chittoor mayor|Andhra court judgement
2015ம் ஆண்டில் ஆந்திர மாநிலம் சித்தூர் நகர மேயராக இருந்தவர் அனுராதா. அவரது கணவர் கட்டாரி மோகன். இருவரும் தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்தவர்கள். சித்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் மேயர் அலுவலகத்தில் இருந்த கணவன், மனைவி இருவரையும் வெறித்தனமாக தாக்கியது. அனுராதாவை தலையில் துப்பாக்கியால் சுட்டனர். தடுக்க ஓடிவந்த கணவர் கட்டாரி மோகன் நாயுடுவை அரிவாளால் வெட்டிக் கொன்றனர். இந்த சம்பவம் 2015 நவம்பர் 17 ம்தேதி நடந்தது. சந்திரபாபு முதல்வராக இருக்கும்போதே, மேயர் அலுவலகத்தில் வைத்தே மேயரும் கணவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவையே உலுக்கியது. போலீஸ் நடத்திய விசாரணையில் கட்டாரி மோகனின் சொந்த அக்கா மகன் சிண்டு நாயுடுதான் அடியாட்களுடன் வந்து 2 பேரையும் தீர்த்துக் கட்டியது தெரிய வந்தது. ஆந்திராவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில், 2 மாதம் கழித்து சிண்டு நாயுடு போலீசில் சரணடைந்தார்.