என்ஐஏ விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல் | Hizb ut-Tahrir | NIA | Chennai
சென்னை டு பாகிஸ்தான் ராணுவம் பைசல் ரஹ்மான் டைரியால் பக் பக் ஜெருசலேமில் இருந்து ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் என்கிற பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது. பாகிஸ்தான், இங்கிலாந்து, ஜெர்மனி, எகிப்து உட்பட பல நாடுகள் இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ளன. சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் ஹமீது உசேன் இந்த அமைப்பின் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்துள்ளார். யூட்யூப் சேனலில் ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் அமைப்புக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டார். இவரது பேச்சுகள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக உள்ளதாக கூறி கடந்த மே மாதம் தமிழக போலீஸ் ஹமீது உசேன் மீது வழக்கு பதிவு செய்தது. போலீஸ் விசாரணையில் அவர் ராயப்பேட்டை ஜானி ஜான் கான் ரோட்டில் மாடர்ன் எசன்ஸியல் எஜுகேஷன் ட்ரஸ்ட் என்ற அமைப்பை உருவாக்கியது தெரியவந்தது. ஞாயிறுதோறும் ரகசிய கூட்டங்களை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர்கள் அப்துல் ரஹ்மான், பைசல் ரஹ்மான் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.